

ஒரு வார உணவு - காந்தி நிலையம் சிறுவர் இல்லம்
கிளிநொச்சியில் இயங்கி வரும் காந்தி நிலையம் சிறுவர் இல்லத்தில் வசிக்கின்ற சுமார் 35 சிறுவர்களுக்கு Kili People முடிந்தவரை உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. இவர்களுக்கான ஒரு வாரத்துக்கான உணவு வழங்குவோம் வாருங்கள்.

ஒரு மாத உணவு - அன்பின் சகோதரிகள் இல்லம் : TRIEST-HOME
கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அன்பின் சகோதரிகள் இல்லத்தில் வசிக்கும் சுமார் 12 சிறுமிகளுக்கு Kili People இன் உணவுக்கான உதவிகள். யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து நிக்கும் இச் சிறுமிகளின் எதிர்காலத்துக்கு பாசக்கரம் நீட்டுவோம்.

பொருண்மிய மேம்பாடு - பசுமைத் திட்டம் - ECONOMICAL DEVELOPMENT - Green Project : Distribution of Young Coconut Trees
2016 ம் ஆண்டுக்குள் 200,016 தென்னம்கன்றுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம். கடந்த 2013, மாசி மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கிளிநொச்சியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.

தையல் பயிற்சி நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டம் எங்கும் கிராம மட்டங்களில் தையல் பயிற்சி நிலையங்களை அமைத்தல். பயிற்சி முடித்த பெண்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்காக சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.

தும்புத் தொழிற்சாலைகள்
கிளிநொச்சி பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் சிறுகைத்தொழிலாக தும்புத் தொழிற்சாலைகளை உருவாக்குதல். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் குறைந்தது சுமார் 20 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துதல்.

SPIRULINA FARM
Spirulina is micro-alga that can be consumed by human and animals. It is usually taken by human as a Nutritional Supplement.

வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - Kilinochchi
2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - Batticaloa
2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த மட்டக்களப்பு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

கல்விக்கான ஒளி - LIGHT FOR EDUCATION
கிளிநொச்சியில் இயங்கும் மஹாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்திற்கு சூரிய சக்தி மின் கலங்கள் ரூபா 368,000.00 செலவில் ஒரு பகுதி கட்டடத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
- Rss
- Youtube
- May26
2013இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013
KILIPEOPLE இன் 2ம் வருட நிறைவு நிகழ்வு Coventry இல் எதிர்வரும் May 26ம் திகதி நடைபெறுகின்றது.
- May12
2013KILI PEOPLE உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.
எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2103 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- Mar14
2013நன் மதிப்பளிப்பு விழா- (A/L - 2012)
கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா.





